அ.தி.மு.க. 2ஆவது வேட்பாளர் பட்டியல்- ஓர் அலசல்!

அ.தி.மு.க. 2ஆவது வேட்பாளர் பட்டியல்- ஓர் அலசல்!
Published on

அ.தி.மு.க.வின் 127 வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி சற்றுமுன்னர் வெளியிட்டார். இதில், முன்னர் அறிவிக்கப்பட்ட இராயபுரம் தொகுதியைத் தவிர்த்து, சென்னை மாவட்டத் தொகுதிகளின் வேட்பாளர்கள் மட்டும் இடம்பெறவில்லை.

அவிநாசி தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், கடந்த முறை அங்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபால் போட்டியிட முடியவில்லை. அவருக்கு வேறு தொகுதியும் வழங்கப்படவில்லை.

இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் 17 பேர் பெண்கள்.

அ.தி.மு.க.வின் தற்போதைய 66 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 46 பேருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என மூன்று அமைச்சரவைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் பதவிவகித்த முன்னாள் அமைச்சர்கள் 31 பேரும் இந்தக் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

கணிசமான பகுதிகளில் எதிரணிக்குப் போட்டியாக பலத்திலும் பணத்திலும் சமாளிக்கும் திறன் படைத்தவர்களா இல்லையா என்பது இந்த வேட்பாளர் தேர்வில் முக்கியமாக கவனத்தில் எடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

தனி நபர் என்கிற வகையில், குறைந்தது 65 சதவீதமான தொகுதிகளில் எதிரணி கடும் போட்டியைச் சந்திக்கக்கூடிய அளவுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

தி.மு.க.வின் வேட்பாளர் தேர்வு எப்படி இருக்கப்போகிறது என்பதும் இரு கட்சிகளுக்கும் இடையிலான போட்டியைத் தீர்மானிக்கக்கூடும்.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா முதலிய பலரும் போட்டியில் இருக்கின்றனர். ஆளும் தி.மு.க.வின் வலுவான கோட்டையாகக் கருதப்படும் தலைநகரில் யாரை எங்கே நிறுத்துவது என்பது குறித்து அ.தி.மு.க. தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

1
1
2
2
3
3
4
4
5
5
6
6
7
7
8
8
9
9
10
10
logo
Andhimazhai
www.andhimazhai.com