அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தடா பெரியசாமி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தடா பெரியசாமி

தனி தொகுதிகளில் பெரியசாமியைக் களமிறக்கிய அ.தி.மு.க.!

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்த தடா பெரியசாமிக்கு தனியாகப் பிரச்சாரப் பயணத்தை அ.தி.மு.க. தலைமை ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக, தனி தொகுதிகளில் பிரச்சாரம் செய்யும்படியாக நட்சத்திரப் பேச்சாளரைப் போல அவரின் சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.   

அதன்படி, வரும் 4ஆம் தேதி காஞ்சிபுரம், 6ஆம் தேதி விழுப்புரம், 8ஆம் தேதி சிதம்பரம், 10ஆம் தேதி நாகை, 12ஆம் தேதி திருவள்ளூர் ஆகிய தனி தொகுதிகளிலும், 

13ஆம் தேதி கள்ளக்குறிச்சி தொகுதியிலும், 14ஆம் தேதி சேலத்திலும், 15ஆம் தேதி நாமக்கல்லிலும், 

மீண்டும் 16ஆம் தேதியன்று நீலகிரி தனி தொகுதியிலும் தடா பெரியசாமி பிரச்சாரம் செய்கிறார் என்று அ.தி.மு.க. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com