இப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் கைது... ஆம்ஸ்ட்ராங் கொலை?!

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஹரிதரன், ஒன்றிய கவுன்சிலர்
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஹரிதரன், ஒன்றிய கவுன்சிலர்
Published on: 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு கட்சியினர் வரிசையாகக் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். 

இரு நாள்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகி மலர்க்கொடி, த.மா.கா. நிர்வாகி ஹரிகரன் ஆகியோரை அடுத்து, பா.ஜ.க.வைச் சேர்ந்த அஞ்சலை தேடப்பட்டுவந்தார். 

அவரை காவல்துறை கைதுசெய்ததாகவும் கைதுகாட்டாமல் விசாரித்துவருவதாகவும் கூறப்பட்ட நிலையில், இன்று மேலும் இன்னொருவர் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான ஹரிதரன் என்ற அவர், முன்னர் கைதான ஹரிகரன் தகவலின்பேரில் பிடிபட்டுள்ளார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இன்று கைதானவரிடம் பெறப்பட்ட தகவலின்படி, கூவம் ஆற்றில் வீசப்பட்ட கொலையாளிகளின் தொலைபேசிகளை காவல்துறையினர் கைப்பற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com