அ.தி.மு.க. விருப்ப மனு! – கால அவகாசம் நீட்டிப்பு!
மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதுக்கான கால அவகாசம் வரும் 6ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த 21ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது.
அதன்படி, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி 1,500 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்து இருந்தனர்.
விருப்ப மனுவுடன் வேட்பாளர் கட்டணமாக ரூ.20 ஆயிரம் செலுத்துவதால் இதுவரை ரூ.3 கோடிக்கு மேல் பெறப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், விருப்ப மனு பெறும் கால அவகாசம் இன்று மாலையுடன் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.