ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு அ.தி.மு.க.வில் தொகுதி ஒதுக்கீடு!

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு அ.தி.மு.க.வில் தொகுதி ஒதுக்கீடு!
Published on

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, சென்னை திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக உள்ள பொற்கொடி, ஒரு வழக்குரைஞர் ஆவார். தன் கணவரின் கொலைக்கு நீதி வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடனும் பேசிவருகிறார். 

இதில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக அடிக்கடி பேசினார். 

இந்நிலையில், இன்று வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு, பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார், பொற்கொடி. 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக எடப்பாடி சட்டமன்றத்திலும் வெளியிலும் வலியுறுத்தியதை முக்கியமாகக் குறிப்பிட்டார். 

தன் கணவரின் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் போட்டியிடுவதாக அவர் கூறினார். 

திரு.வி.க. நகரில் செல்வாக்கு இருக்கிறதா என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, அதிகம் என்றார் அவர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com