சபாநாயகரிடம் ஒன்றாக இணைந்த அ.தி.மு.க. அணிகள்!

சபாநாயகரிடம் ஒன்றாக இணைந்த அ.தி.மு.க. அணிகள்!
Published on

சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை அ.தி.மு.க.வின் பிரிந்திருந்த இரண்டு அணியினரும் இன்று ஒன்றாகச் சந்தித்தனர். 

பேரவைத் தலைவர் அலுவலகத்தில் இன்று மதியம் இச்சந்திப்பு நடைபெற்றது.

சி.வி.சண்முகம் தரப்பில் அவரைத் தவிர வேலுமணி முதலிய பெரும்பாலான உறுப்பினர்களும் வந்திருந்தனர். முன்னதாக, அவர்கள் பிரபாகரிடம் அளித்திருந்த மனுவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தனர். பழைய மனுவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரியிருந்தனர்.

அதைப்போல, எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் கொறடா உத்தரவை மீறியதாக சண்முகம் தரப்பின் 25 உறுப்பினர்கள் மீது தகுதிநீக்கம் செய்யும்படி கேட்டு மனு தரப்பட்டது.

அவர் தரப்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்துவந்து தங்கள் பழைய மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த மனுக்கள் மீது நாளை காலை முடிவைக் கூறுவதாக பேரவைத் தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com