எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சிறுபான்மையினர் வாக்கு: தி.மு.க.வுக்கு பயம் வந்துவிட்டது! - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

”பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகியதும் சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க. பக்கம் சாய்ந்துவிடுவார்கள் என்ற பயம் தி.மு.க.வினரிடையே வந்துவிட்டதாக” எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் சீலநாயக்கன்பட்டியில் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி வேறு; கொள்கை வேறு. அ.தி.மு.க. கொள்கை எப்போதும் நிலையானது. அ.தி.மு.க.வுக்கு மதம், சாதி கிடையாது. ஜனநாயக நாட்டில் யாருக்கும் யாரும் அடிமை கிடையாது.” என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.கூட்டணியிலிருந்து அ.தி.மு.க விலகியதும், இஸ்லாமியர்கள் மீது முதலமைச்சருக்கு அக்கறை ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் “நான் எப்போதுமே ஜாதிக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்டவன். அனைத்து மதத்தையும் நேசிக்கக் கூடியவன்.

சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க.தான் அரணாக இருப்பதாக ஒரு மாயத்தோற்றம் இருந்து வந்தது. பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகியதும் சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க. பக்கம் சாய்ந்துவிடுவார்கள் என்ற பயம் தி.மு.க.வினரிடையே வந்துவிட்டது. சிறுபான்மை மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்திருந்தால், அவர்கள் உங்களை நேசிப்பார்கள். ஆனால், தி.மு.க. எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை. ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com