அப்பவே செஞ்சிருக்கலாமே... விஜய் அரசுக்கு அ.தி.மு.க. கொட்டு!

அ.தி.மு.க. தலைமை அலுவலகம்
அ.தி.மு.க. தலைமை அலுவலகம்
Published on

மின்சார வாரிய மோசடி குறித்து முன்னரே சிபிசிஐடியிடம் ஒப்படைத்திருக்கலாமே என அ.தி.மு.க. ஐடி அணி விமர்சனம் செய்துள்ளது. 

”மின்துறையில் ஹார்டு டிஸ்க்கு திருடு போன வழக்கை ஏன் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கவில்லை என நாம் 3 நாள்களுக்கு முன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது மிகவும் தாமதமாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது பொய்க்கால் குதிரை அரசு.

இதற்கு எதற்கு இத்தனை நாட்கள்?

திருடு போன முதல் நாளே செய்ய வேண்டிய வேலையை ஏறத்தாழ ஒரு வாரம் தாமதம் செய்துள்ளதன் பின்னணி என்ன?

செய்திகளில் வரும் வரை இதுபற்றி அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் தராமல் மறைத்து வைத்திருந்ததே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது வெறும் ஹார்டு டிஸ்க்கு திருட்டு மட்டுமல்ல. தரவுகள் திருடப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.

தரவுகள் திருட்டு பற்றி உங்கள் அரசின் காவல்துறையே விசாரிப்பதை இனிமேல் எப்படி நம்ப முடியும்?

நியாயமான விசாரணை நடத்தி உண்மை வெளிவர வேண்டும் எனில், எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரியபடி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.” என்று அந்தக் கட்சியின் சமூக ஊடக அணி கூறியுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com