அ.தி.மு.க.வின் சார்பில் 16 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்டப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமைக்கழக அலுவலகத்தில் சற்றுமுன்னர் இப்பட்டியலை வெளியிட்டார்.
இதில், தமிழ்நாட்டில் 16 பேர், புதுச்சேரிக்கு ஒருவர் என 17 தொகுதிகளின் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்படி, புதுவை உட்பட 33 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்டப் பட்டியல் விவரம்:
புதுச்சேரி - தமிழ்வேந்தன்
தருமபுரி - அசோகன்
வேலூர் - பசுபதி
திருவண்ணாமலை - கலியபெருமாள்
ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார்
கள்ளக்குறிச்சி - குமரகுரு
பெரம்பலூர் - சந்திரமோகன்
திருச்சி - கருப்பையா
மயிலாடுதுறை - பாபு
கோவை - சிங்கை ராமச்சந்திரன்
திருப்பூர் - அருணாசலம்
நீலகிரி - லோகேஷ்
சிவகங்கை - சேகர் தாஸ்
நெல்லை - சிம்லா முத்துச்சோழன்
தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
கன்னியாகுமரி - பசிலியா நசரேத்.
விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக இராணி அறிவிக்கப்பட்டுள்ளார்.