வேலுமணி வெளியேறுகிறார்?- அ.தி.மு.க.வில் நடப்பது என்ன?

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி
Published on

விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தரும் விவகாரத்தில் அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஒரு கோஷ்டியாகப் பிரிந்து தனி அணி காண்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

ஆட்சி அமைக்கப் போதுமான ஆதரவு இல்லாத நிலையில், விஜய் கட்சி மற்ற கட்சிகளின் உதவியைக் கேட்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது. ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கேட்ட நிலையில், மீதம் தேவைப்படும் 6 பேரின் ஆதரவுக்காக அ.தி.மு.க.வை நாடவேண்டிய நிலை உருவானது.

நேற்றே விஜய்யின் த.வெ.க.வை ஆதரிப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சு நடப்பதாக திருச்சி அ.தி.மு.க. வெற்றி வேட்பாளரும் ஆதவ் அர்ஜூனாவிம் மாமியாருமான லீமா ரோஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் சிறிது நேரத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துவிட்டு வந்த ஓ.எஸ்.மணியன், அப்படி எல்லாம் ஆதரவு இல்லை என மறுத்துவிட்டார்.

விஜய்க்கு ஆதரவு தருவதில் கட்சிக்கு உள்ளேயே இரண்டு பிரிவுகள் உருவாகியுள்ளன. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியும் சி.வி.சண்முகமும் தனியாக 40 பேருடன் விஜய்யை ஆதரிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சற்றுமுன்னர் சண்முகமும் வேலுமணியும் சந்தித்துள்ளனர்.

அவர்கள் பழனிசாமியைச் சந்திக்கச் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வுக்குள் என்னதான் நடக்கிறதோ என தொண்டர்கள் தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.

கடைசிக் கட்டத் திருப்பமாக, விஜய் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க சற்றுமுன் நடைபெற இருந்த செய்தியாளர் சந்திப்பை காங்கிரஸ் இரத்து செய்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com