தமிழ் நாடு
அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 76ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 24ஆம்தேதி தொடங்கி 5 நாள்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
மாவட்டச்செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து, கட்சியின் சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு இந்தப் பொதுக்கூட்டங்களை நடத்திக்காட்ட வேண்டும் என்றும் பழனிசாமியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.