மானாமதுரையில் சீர்கேடுகள்- அ.தி.மு.க. போராட்ட அறிவிப்பு

மானாமதுரையில் சீர்கேடுகள்- அ.தி.மு.க. போராட்ட அறிவிப்பு
Published on

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பல்வேறு சீர்கேடுகள் நிலவி வருகின்றன என்று அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

”மானாமதுரையில் சுகாதார, நிர்வாக சீர்கேடுகள் தொடர்கின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றைக் கண்டித்தும்;

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடவும், மானாமதுரை அரசு மருத்துவமனையில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகளை உடனடியாக சரிசெய்திட வலியுறுத்தியும்,   சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரும் 16ஆம் தேதி திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com