வி.பி. துரைசாமி
வி.பி. துரைசாமி

அ.தி.மு.க. கூட்டணி தொடரவே பேசி வருகிறோம்! – வி.பி. துரைசாமி பேட்டி!

அ.தி.மு.க. கூட்டணி தொடரவே பேசி வருகிறோம் என்று பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் டெல்லி சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் மூத்த தலைவர்களான ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க.வின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த, பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமியிடம், டெல்லியில் கட்சியின் மூத்த தலைவர்களை அண்ணாமலை சந்தித்துப் பேசியது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நல்ல முடிவு கிடைக்கும். கூட்டணி நீடிக்கும். கூட்டணி தொடரவே பெரியவங்க எல்லாம் பேசுறாங்க.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com