தமிழ் நாடு
அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 52 ஆண்டுகள் ஆனதையொட்டி இன்று மாநிலம் முழுவதும் அக்கட்சியின் சார்பில் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் பரபரப்பும் தொற்றிக்கொண்டுள்ள நிலையில், அக்கட்சியின் ஆண்டு விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையில் கட்சியின் தலைமையகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் கொடியை ஏற்றினார். பின்னர் அங்கு வந்திருந்த கட்சித் தொண்டர்களுக்கு அவர் இனிப்புகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, விபத்துகளில் உயிரிழந்தவர்கள், மற்ற உதவிக் கோரிக்கை விடுத்தவர்கள் 62 பேருக்கு 1.03 கோடி ரூபாய் நிதியுதவியையும் அவர் வழங்கினார்.