வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

Agri rank list released
வேளாண் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
Published on

வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கைகள் நடைபெறும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் பட்டப் படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியீட்டு விழா தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

இந்த கல்வியாண்டில் 14 வேளாண்மையியல் சார்ந்த இளநிலை பட்டப் பிரிவுகளில் சேர்வதற்காக மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

அரசுக் கல்லூரிகளில் 2,856 இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டான 3,051 இடங்களும் இணைய வழி கலந்தாய்வு மூலம் நிரப்பட உள்ளன.

சேர்க்கை குறித்த தேதிகள் வரும் நாள்களில் வெளியிடப்படும்.

இதுகுறித்த தகவல்களை tnau.ucanapply.com என்ற சேர்க்கைக்கான இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com