பத்து ஆளு வேலையை ஒரே ஆளு செய்யலாம்! ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை

AI
ஏஐ
Published on: 

அண்மைக் காலமாக, அலுவலகங்களில் ஏஐ பயன்பாடு அதிகரித்து வருகிறது. மனிதர்கள் செய்யும் வேலைகளை குறைந்த நேரத்தில் ஏஐ செய்து முடிப்பதால், பல்வேறு தொழில்நிறுவனங்களும் ஏஐ பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

இந்நிலையில், ஏஐ பயன்பாடு குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் சோகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ள கருத்து:

"ஏஐ பயன்பாட்டின் மூலமாக, அறிவார்ந்த ஒரு தனிநபரே 10 பேர் செய்யக்கூடிய வேலையை செய்து முடிக்கலாம் என்ற சிக்கல் தற்போது கணினியில் வேலை செய்யும் அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய சவாலாக உள்ளது.

இதற்கு அர்த்தம் கணினியில் வேலை செய்யும் 90% பேருக்கு வேலையில்லை என்பதில்லை. மென்பொறியாளர்களையோ, டிஜிட்டல் சந்தைப்படுத்துபவரையோ பணியமர்த்த முடியாத ஒரு நிறுவனத்தால், தற்போது பணியமர்த்த முடியம்.

இதன் அர்த்தம் நமது பொருளாதாரத்தை மீண்டும் சமன் செய்ய முயல்வதாகும். இது கடினமாக இருந்தாலும், நம்மால் செய்ய முடிந்த ஒன்று இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப தயாராவது ஆகும்." என்று ஸ்ரீதர் வேம்பு கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram