சட்டப்பேரவையில் இன்று பொதுத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்:
1) முதல்வரின் உதவி மைய இணையதளத்தில், ஏஐ திறனுடைய சாட்பாட், உரையாடும் வாய்ஸ்பாட் சேவை ரூ. 2.18 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்படும்.
2) அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், சென்னை தலைமைச செயலகத்திலும் டிஜிட்டல் கியோஸ்க்குகள் ரூ. 30 லட்சத்தில் நிறுவப்படும்.
3) முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகள் உயர்கல்வி பயில வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை தலா ரூ. 2000 உயர்த்தி வழங்கப்படும்.
4) வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு ஏஐ அடிப்படையிலான உடனடி உலகளாவிய பொருத்தம் என்ற தளம் உருவாக்கப்படும்.
5) முன்னாள் படைவீரர்கள், விதவைகளுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ. 4000த்தில் இருந்து ரூ.6000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
6) பொதுநல நோக்கில் உதவிகளைச் செய்துவரும் அயலகத் தமிழர்களுக்கு 'வெற்றித் தமிழர் விருது' என்ற புதிய விருது வழங்கி கௌரவிக்கப்படும்.