நவ.5 அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... பழனிசாமி அறிவிப்பு!

Edappadi K. Palaniswami
எடப்பாடி பழனிசாமி
Published on

அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என அதிமுக பொதுச் செயலர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியின் விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவரை அக்கட்சியின் உறுப்பினர் உட்பட அனைத்துப் பதவிகளிலும் நீக்கி உத்தரவிட்டிருந்தார் பொதுச்செயலாளர் பழனிசாமி.

இந்நிலையில், அதிமுகவின் உட்கட்சிப் பூசல் மீண்டும் உச்சத்திற்கு வந்திருக்கிறது.

இந்நிலையில்தான், நவம்பர் 5ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அதிமுகவின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 5.11.2025 புதன் கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com