திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகி... இபிஎஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த சின்னசாமி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த சின்னசாமி
Published on

அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சின்னசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் சிங்கநல்லூர் தொகுதியில் 2006 மற்றும் 2011ஆம் ஆண்டு தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் சின்னசாமி. மேலும், இவர் அண்ணா தொழிற்சங்க செயலாளராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தாயுள்ளத்தோடு என்னை இணைத்தமைக்கு.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் உழைப்போருக்கு வேலை இல்லை. அவருக்கு சாதகமானவர்களை வைத்துக்கொண்டு கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். என் மீது பொய் வழக்குப் போட்டு அவர்களே திரும்பப் பெற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சிறப்பாக இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள். இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com