
சட்டமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து அதிமுக எம் எல் ஏக்கள் இபிஎஸ் அணி, எஸ்பி வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்துள்ளனர். இரு தரப்பும் தனித்தனியாக சட்டமன்றக் குழுத்தலைவரைத் தேர்ந்தெடுத்து சபாநாயகரிடம் கடிதம் வழங்கி உள்ளனர்.
” தற்போது திமுக என்னை முதல்வராக ஆக்க ஒப்புக்கொண்டுள்ளனர் என்று இபிஎஸ் சொன்னபோது நாங்கள் பெரும்பாலான எம்எல் ஏக்கள் ஒப்புக்கொள்ளவில்லை. திமுகவை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் நாங்கள். இதை வேண்டாம் என்று நாங்கள் சொன்னோம். இதைத் தொடர்ந்து பெரும்பான்மையான அதிமுக எம் எல் ஏக்கள் கலந்துகொண்ட சட்டமன்றக்குழு கூட்டத்தில் தவெக ஆட்சியை ஆதரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை த் தேர்வு செய்துள்ளோம். கொறடாவாக விஜயபாஸ்கர், துணைத்தலைவராக அரி, செயலாளராக காமராஜ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். முறைப்படி தற்கால சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். யார் மீதும் தனிப்பட்ட குற்றச்சாட்டு இல்லை. யார் மீதும் குறை சொல்லவில்லை. தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம்” என்று இன்று காலை செய்தியாளர்களிடம் கூறினார் அதிமுக முனனாள் அமைச்சர் சிவி சண்முகம். தங்கள் குழுவினர் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்த நாள். இன்றைக்கு அவருக்கு எதிராக வெளிப்படையாக உருவாகி இருக்கும் இக்கலகத்தை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. பிளவு படும் அணிக்கு 32 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால்தான் அவர்கள் கொறடா உத்தரவை மீறிச் செயல்பட முடியும். இல்லையெனில் கட்சித் தாவல் தடைச் சட்டத்துக்கு உள்ளாவர்கள். எனவே இருதரப்பும் தங்கள் பக்கம் ஆதரவு எம் எல் ஏக்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.
எஸ்பி வேலுமணி அணியில் இருக்கும் 24 எம்.எல்.ஏக்கள்:
எஸ்.பி. வேலுமணி – தொண்டாமுத்தூர்
சி.வி.சண்முகம் – மயிலம்
சி.விஜயபாஸ்கர் – விராலிமலை
கோ. அரி – திருத்தணி
சுகுமார் – ஆற்காடு
கே.சி.வீரமணி – ஜோலார்பேட்டை
பாலகிருஷ்ண ரெட்டி – ஒசூர்
கே.பி.அன்பழகன் – பாலக்கோடு
மரகதம் வெற்றிவேல் – பாப்பிரெட்டிப்பட்டி
சேகர் – பரமத்தி வேலூர்
சத்தியபாமா – தாராபுரம்
நடராஜ் – காங்கேயம்
ஜெயகுமார் – பெருந்துறை
அரிபாஸ்கர் – அந்தியூர்
ரவி மனோகரன் – பழனி
விஸ்வநாதன் – நத்தம்
எம்.ஆர். விஜயபாஸ்கர் – கரூர்
லீமா ரோஸ் – லால்குடி
தாமரை ராஜேந்திரன் – அரியலூர்
ராகேஷ் – சங்கராபுரம்
அருண்மொழிதேவன் – புவனகிரி
ஆர்.காமராஜ் – நன்னிலம்
திலீபன் ஜெய்சங்கர் – சங்கரன்கோவில்
இசக்கி சுப்பையா – அம்பாசமுத்திரம்