தமிழ் நாடு
மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க. முக்கிய தலைவருமான அமித்ஷா நாளை திருச்சிக்கு வருகை தருகிறார். இரண்டாம் நாள் பயணமாக அவர் தமிழகம் வந்துள்ளார்.
காரைக்காலில் நாளைமறுநாளில் புதுச்சேரி ஆட்சிப்பகுதிக்கு உட்பட்ட காரைக்காலில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக அவர் வரவுள்ளார்.
தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜ.க. தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கியுள்ளனர். விரைவில் பிரதமர் மோடி மதுரைக்கு வரவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமித்ஷா மீண்டும் தமிழகத்துக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.