தமிழிசை செளந்தரராஜனை அழைத்து பேசும் அமித் ஷா
தமிழிசை செளந்தரராஜனை அழைத்து பேசும் அமித் ஷா

தீவிரமாகப் பணியாற்ற அறிவுறுத்தினார் அமித் ஷா - தமிழிசை விளக்கம்!

ஆந்திரப்பிரதேச அமைச்சரவை பதவியேற்பு விழா மேடை விவகாரம் குறித்து தமிழிசை செளந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில் தமிழிசையை கண்டிக்கும்படியாக அமித்ஷா ஏதோ கூறிய காட்சி, சமூக ஊடகங்களில் பலத்த விவாதப் பொருளாக மாறியது. முதலில் சென்னை விமான நிலையத்தில் பதில்கூற மறுத்துவிட்டாலும், சமூக ஊடக விவாதம் தொடர்ந்தது. அதையடுத்து தமிழிசை இதுபற்றிய தன் கருத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “2024 தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தபோது, தேர்தலுக்குப் பிந்தைய நிலைமை குறித்து கேட்க என்னை அழைத்தார். மேலும், அரசியல் பணிகளையும் தொகுதிப் பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ளுமாறும் மிகுந்த அக்கறையுடன் என்னை அறிவுறுத்தினார். சமூக ஊடகங்களில் பரவிவரும் தேவையற்ற ஊகங்களையும் தெளிவுபடுத்துவதற்கே இந்தப் பதிவு.” என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com