அமித் ஷா
அமித் ஷா

மோடியை அடுத்து அமித் ஷா... ஏப்ரல் 4,5இல் தமிழகத்தில் பிரச்சாரம்!

மக்களவைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் ஓடிஓடி வந்து பிரச்சாரக் கூட்டங்களில் பேசினார். அவரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழகத்தில் வரும் 4, 5 ஆகிய தேதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். 

4ஆம் தேதி மதுரை, சிவகங்கை ஆகிய தொகுதிகளிலும் மறுநாள் 5ஆம் தேதி சென்னையிலும் அமித்ஷா பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன. 

முன்னதாக, பிரதமர் மோடி திருப்பூர், சேலம், கோவை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

அகில இந்திய தலைவர்களின் பிரச்சாரத்தால் பா.ஜ.க. கூட்டணிக் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com