திருத்திய அமித்ஷா- ரங்கசாமியை நா.சாமி ஆக்கிய ’மு’ழிபெயர்ப்பாளர்!

அமித்ஷா
அமித்ஷா
Published on

புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் பகுதிக்கு உட்பட்ட காரைக்காலில் இன்று பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மைய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது, அவருடைய பேச்சைத் தமிழில் ஒருவர் மொழிபெயர்த்தார். அமித்ஷா இப்போதைய முதல்வர் ரங்கசாமியைப் பற்றிக் குறிப்பிட்டதைத் தமிழில் சொன்னவர், இப்போதைய முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பாக ஆட்சியை அளித்துக்கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டார். 

அவர் தவறுதலாக காங்கிரசின் முன்னாள் முதலமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டதால், அதிர்ச்சியடைந்த அமித்ஷா ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து, அவரிடம் இந்தியில் ஒரு குறிப்பைக் கூறினார். அதையடுத்து, அனைவரையும் முழிக்கவைத்த அந்த ’முழி’பெயர்ப்பாளர் தன் தவறை உணர்ந்து, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மிக மோசமான ஆட்சியை நடத்தினார் என்று குறிப்பிட்டார்.

பிறகு, அமித்ஷா தன் பேச்சைத் தொடர்ந்தார்.

முன்னதாக, காரைக்கால் அருகே கோட்டுச்சேரியில் பா.ஜ.க.வின் சுவர் விளம்பரத்தில் தாமரை சின்னத்திற்கு அவர் வண்ணமடித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com