மாடு முட்டியதில் விழுந்து கிடக்கும் முதியவர்
மாடு முட்டியதில் விழுந்து கிடக்கும் முதியவர்

மாடு முட்டியதால் சிகிச்சை பெற்று வந்த முதியவர் பலி!

மாடு முட்டியதால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுந்தரம் (வயது 80) என்ற நேற்று உயிரிழந்தார்.

கடந்த 18ஆம் தேதியன்று சென்னை திருவல்லிக்கேணி சாலையில் சுற்றி திரிந்த மாடு ஒன்று, சாலையில் சென்று கொண்டிருந்த சுந்தரம் (வயது 80) என்பவரை முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த பத்து நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த 19ஆம் தேதி திருவல்லிக்கேணியைச் சேர்ந்த செல்வி என்பவர் குப்பைகளைக் கொட்டச் சென்றபோது மாடு முட்டி இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், கடந்த புதன் கிழமை திருவல்லிக்கேணி டி.பி.கோவில் தெருவைச் சேர்ந்த கஸ்தூரி ரங்கன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மாடு ஒன்று திடீரென அவரை முட்டி தூக்கி வீசியது. இதில், பலத்த காயம் அடைந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com