ஆனந்த் சீனிவாசன்
ஆனந்த் சீனிவாசன்

ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரசில் பதவி!

பொருளாதார நிபுணராக அறியப்படும் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத்துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் பொருளாதாரம், நிதி நிலைமை, நிதி மேலாண்மை வழிகாட்டுதல்கள் குறித்த சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமானார்.

மத்திய பா.ஜ.க. அரசின் பொருளாதார கொள்கையை தொடர்ந்து விமர்சித்து வருபவர் ஆனந்த் சீனிவாசன். இது தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில், அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத் துறைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com