அரசுப் பள்ளி ரீல்ஸ்... அமைச்சர் வேலை அதுவல்ல- அன்பில் மகேஸ்

அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்
Published on

தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளியில் நடந்துகொண்டது சர்ச்சையாக ஆன நிலையில், தி.மு.க.வின் முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அதை விமர்சித்து தன் சமூக ஊடகப் பக்கங்களில் கருத்து வெளியிட்டுள்ளார்.    

அந்தப் பதிவு:

”தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!

மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.

தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்.” என்று மகேஸ் கூறியிருந்தார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com