
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என பா.ம.க. முடிவெடுக்காத நிலையில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று சந்தித்துப் பேசுகிறார்.
இதற்காக, சென்னை, பசுமைவெளிச் சாலையில் உள்ள பழனிசாமியின் வீட்டுக்கு அன்புமணி சற்று முன்னர் சென்றுள்ளார்.
அவருடன் பா.ம.க. நிர்வாகிகள் வடிவேல் இராவணன், திலகபாமா, வழக்கறிஞர் கே.பாலு ஆகியோரும் சென்றனர்.
முன்னதாக, பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க. பின்னர், கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து போட்டியிட்டது.
மீண்டும் அ.தி.மு.க., பா.ஜ.க. இணைந்துள்ள நிலையில் அதே கூட்டணியில் தொடர்வது உறுதியாகியுள்ளது.
இன்றைய சந்திப்பில் பா.ம.க.வுக்கான தொகுதிகள் எத்தனை என்பது இறுதியாகிவிடும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.