அப்பா, மகன் சந்திப்பு- முடிவுக்கு வருகிறதா பா.ம.க. பஞ்சாயத்து?

அன்புமணியைக் கட்டித்தழுவி அழுத இராமதாஸ்
அன்புமணியைக் கட்டித்தழுவி அழுத இராமதாஸ்
Published on

பா.ம.க. நிறுவனர் இராமதாசை அவரின் மகன் அன்புமணி இன்று காலையில் தைலாபுரத்தில் சந்தித்தார். இரு தரப்புகளுக்கும் இடையிலான முறுகல் நிலை இத்துடன் முடிவுக்கு வருகிறது என பா.ம.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையில் பா.ம.க. இரண்டு பிரிவுகளாக நின்று, சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது. ஆனால் இராமதாசின் தரப்பு வேட்பாளர் ஒருவர்கூட வெற்றிபெற முடியவில்லை. அன்புமணி தரப்பில் நான்கு பேர் சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், திடீரென திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள இராமதாசை அவரின் மகன் அன்புமணி, மனைவி, மக்கள், பெயரப் பிள்ளைகளுடன் சென்று சந்தித்தார். பெற்றோரின் திருமண நாளை முன்னிட்டு அவர்களிடம் வாழ்த்து பெற்றதாக அவர் கூறினார்.

கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்ததா எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, இனி நல்லது நடக்கும் என்று மட்டும் கூறியபடி நகர்ந்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com