அன்புமணி
அன்புமணி

கூட்டணி குறித்து வரும் செய்திகள் முற்றிலும் வதந்தி! – ஊடகங்களை சாடிய அன்புமணி

தேர்தல் கூட்டணி தொடர்பாக வெளிவரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று கூறியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி, ஊடகங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி கூறியதாவது:

“கூட்டணி குறித்து வரும் செய்திகள் அனைத்தும் வதந்தி, பொய்யானவை. ஊடகத்துறை புனிதமானவை அதை நீங்கள் கெடுத்துக் கொள்ளாதீர்கள். பா.ம.க. கூட்டணி குறித்து இங்கே பேசினார்கள், அங்கே பேசினார்கள் , கூட்டணி முடிந்தது என்று வெளியாக கூடிய செய்தி பொய். இன்னும் ஓரிரு வாரங்களில் எங்களின் நிலைப்பாட்டைத் தெரிவிப்போம். அதிகாரப்பூர்வமாக எங்கள் மூலமாக செய்தி வரும் வரை பொதுமக்கள் எந்த செய்தியையும் நம்ப வேண்டாம்.

உங்களின் அரசியல் சாயத்துக்காக, எங்களைப் பற்றிய செய்திகளை திரித்து வெளியிடாதீர்கள்.” என்று கூறிய அன்புமணி ஊடகங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com