
அன்புமணி ஆதரவாளர்கள், ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் அடிமைகள் என பாமக செயல் தலைவரான ஸ்ரீ காந்தி மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
சேலத்தில் இன்று (டிசம்ப 29) நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் ஸ்ரீ காந்தி பேசுகையில், “அய்யாவை எதிர்க்குற அந்த கும்பலைப் பார்த்து நான் ஒன்னே ஒன்னு கேட்கிறேன்.. டேய்.. நீங்க யாருடா? உங்களுக்கு என்னடா தகுதி இருக்கு? அய்யாவை (ராமதாஸை) கேள்வி கேட்க…
இன்னைக்கு கோட் சூட் போட்டுகிட்டு காரில வந்து இறங்குறீங்களே தம்பி அன்புமணி.. அந்த கோட் சூட் யாரு கொடுத்தது? இது ஐயா உங்களுக்குப் போட்ட பிச்சை. ஐயா இல்லாத பாமக பிணத்துக்கு சமம். அந்தப் பிணத்தை வச்சு அரசியல் பண்ணலாம்னு அன்புமணி டீம் நினைக்கிறது. ஆனால் இந்த ஸ்ரீகாந்தி உயிரோடு இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது.
பாமக என்பது ராமதாஸ் கட்டிய கோட்டை; அவர்தான் இங்கே ராஜா. அன்புமணி ஆதரவாளர்கள், ஆர்எஸ்எஸ் கூட்டத்தின் அடிமைகள்.” என்றார்.