சட்டப்பேரவையில் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்!

அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா
அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா
Published on

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் பாமகஎம் எல்ஏக்கள் இன்று காலை தர்ணாவில் ஈடுபட்டனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையேயான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவை பாமக குழுத் தலைவர் ஜி.கே.மணி, பாமக கொறடாவாக அருள் ஆகியோரை நீக்கக் கோரி கடந்த மாதம் அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைச் செயலா் சீனிவாசனை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.

ஆனால், இதுவரை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி நீக்கப்படாத நிலையில், இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, பேரவை வளாகத்தில் அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் மயிலம் தொகுதி சிவகுமாா், மேட்டூா் தொகுதி சதாசிவம், தருமபுரி தொகுதி வெங்கடேஸ்வரன் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் நினைவூட்டல் கடிதத்தையும் வழங்கினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com