பிரபல தொழிலதிபர் மீது செய்தி வாசிப்பாளர் பாலியல் புகார்!

P.R. SUNDAR
பி.ஆர். சுந்தர்
Published on

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் மீது ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் செய்தி வாசிப்பாளரை, சுந்தர் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகவும் அச்சுறுத்தியதாகவும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிலதிபர் சுந்தரிடம், வேலைவாய்ப்பிற்காக அந்தத் செய்தி வாசிப்பாளர் அணுகியுள்ளார். அப்போது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, பட்டினப்பாக்கத்தில் உள்ள தன் வீட்டிற்கு வரவழைத்த சுந்தர் அங்கு அவரிடம் தவறாக நடந்துகொண்டதாகப் புகார் எழுந்துள்ளது.

மேலும், இதுகுறித்து சுந்தரின் மனைவியிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை என்று புகார் அளித்த செய்தி வாசிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுக் கூறி, செய்தி வாசிப்பாளரை சுந்தர் பல முறை தன் அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார்.

அப்போது, அவர் மூன்று மணி நேரமாக ஓர் அறையில் அடைத்து வைத்து, தொந்தரவு கொடுத்து, அச்சுறுத்தியதாக செய்தி வாசிப்பாளர் போலீசாரிடம் கூறினார்.

பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான குற்றம், குற்றச் செயல்களில் ஈடுபடுதல், அச்சுறுத்துதல் உட்பட்ட பிரிவுகளில், சுந்தர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுந்தர் பொருளாதாரம் தொடர்பான பிரிவில் பங்குச்சந்தை தொடர்பான கருத்துகளை 12 லட்சம் உறுப்பினர்களுடன் கூடிய தனது யூட்டியூப் சேனலில் தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com