தமிழகத்திற்கு 3 டி.எம்.சி. நீர் திறப்பு- சந்திரபாபு தகவல்

CM Vijay met Andhra CM
ஆந்திர முதல்வருடன், முதல்வர் விஜய் சந்திப்பு
Published on: 

தமிழகத்திற்கு 3 டி.எம்.சி. நீர் திறந்துவிட முடிவு செய்துள்ளதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக நேற்று விஜயவாடாவுக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள கனகதுர்கா கோவிலில் தரிசனம் செய்தார். அங்கு விஜய்க்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவுடன் கிருஷ்ணா நதி நீர் திறப்பு குறித்தும், தென் மாநில நதிகள் இணைப்பு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து, சந்திரபாபுவுடன் முதலமைச்சர் விஜய் விஜயவாடா உற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்று, கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது சமூக ஊடகப்பக்கத்தில், "இன்று விஜயவாடாவில், தமிழகத்தின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சி. தெலுங்கு கங்கா திட்டம், கோதாவரி-காவேரி நதி இணைப்பு முயற்சி குறித்தும் நாங்கள் கலந்துரையாடினோம்.

இந்த ஆண்டு ஏற்கனவே சென்னைக்கு 4.08 டிஎம்சி தண்ணீரை ஆந்திரப் பிரதேசம் வழங்கியுள்ளது. எங்களுக்கென தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் எங்கள் மக்களின் தேவைகளைச் சமநிலைப்படுத்தி அண்டை மாநிலத்துக்கு கூடுதல் நீர் வழங்க பரிசீலிப்போம். நீர் என்பது மோதலுக்கான ஆதாரமாக இல்லாமல் ஒத்துழைப்புக்கான ஆதாரமாக இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மத்திய அரசின் ஆதரவுடன், கோதாவரி-காவேரி நதி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com