செம்மரக் கட்டைகள்
தமிழ் நாடு
செம்மரம் கடத்தியதாக 19 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கைது!
ஆந்திராவில் செம்மரக் கட்டைகள் கடத்தியதாக 19 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் கடத்திய புகாரின் பேரில் 19 தமிழர்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தமிழர்கள் 19 பேரும் சேலம், விழுப்புரம், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. செம்மரக் கட்டைகளை வெட்டப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி, இருசக்கர வாகனங்களை செம்மரங்கள் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.