முதல்வர் விஜய் பற்றி அவதூறு - அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

anitha r radhakrishnan
அனிதா இராதாகிருஷ்ணன்
Published on

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சரும் தி.மு.க.வின் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா இராதாகிருஷ்ணன் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டார்.  

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அப்பா குட்டிக்கதையைச் சொன்னார். அதற்குப் பதில் அளிப்பதாகக் கூறி, கடந்த மாதம் 20ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அனிதா இராதாகிருஷ்ணன் விஜய் பற்றி அவதூறாகப் பேசினார்.

அதைக் கடுமையாகக் கண்டித்த த.வெ.க. நகரச் செயலாளர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்படி அனிதா மீது வழக்கு பதியப்பட்டது.

இதனிடையே, தன்னைக் கைதுசெய்யாமல் தடுக்க முன்ஜாமின் மனுவை அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்தார்.

அதை இன்று நீதிமன்றம் தள்ளுபடி செய்த சிறிது நேரத்தில் அனிதா கைதுசெய்யப்பட்டார்.

திருச்செந்தூர் அருகில் ஆத்தூர் பேரூராட்சியில் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது அவர் கைதானார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com