கமலாலயம்
கமலாலயம்

பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு- கோவையில் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை!

தமிழக பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது. 

பா.ஜ.க.வின் தலைமைநிலையப் பொதுச்செயலாளர் அருண்சிங் அக்கட்சியின் மூன்றாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். 

அண்மையில் மத்தியப்பிரதேசத்திலிருந்து இரண்டாம் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக ஆன மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மீண்டும் நீலகிரியில் போட்டியிடுகிறார். 

ஆளுநர் பதவியிலிருந்து விலகிய தமிழிசை தென்சென்னையில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மூத்த தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் மீண்டும் போட்டியிடுகிறார். 

பா.ஜ.க.வின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையிலும், மைய சென்னையில் வினோஜ் பி. செல்வமும், கிருஷ்ணகிரியில் நரசிம்மனும் போட்டியிடுகின்றனர்.

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தாமரை சின்னத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com