பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை
பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை

போலீசிடம் திருடன் சொல்வது போல தி.மு.க. சொல்கிறது!

நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என ஆர்.எஸ். பாரதி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம் அனுப்பியது குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, “போலீசிடம் திருடன் சொல்வது போல் தி.மு.க. சொல்கிறது” என விமர்சித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:

“நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4கோடி சிக்கியது தொடர்பாக நயினார் நாகேந்திரன் தனக்கும் அதுக்கும் சம்பந்தம் என்று கூறிய பிறகு அது குறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் எந்த பிரச்சனையும் இல்லை. எதிர்க்கட்சியினர் இதை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர்.

உதாரணமாக, திருடன் ஒரு வீட்டில் திருடிக் கொண்டிருக்கும்போது காவலர்கள் வருவது தெரிந்தால், திருடன் வீட்டிலிருந்து வெளியே வந்து, ‘திருடன் திருடன்’என்பாவன். காவலர்களும் உள்ளே போய் தேடிப்பார்ப்பார்கள். திருடன் இருக்கமாட்டான். அந்நேரம் திருடன் ஓடிவிட்டிருப்பான். அப்படித்தான் தி.மு.க.

தேர்தல் வரும்போது தி.மு.க. செய்யக் கூடிய தவறுகளை மக்கள், காவல் துறை, தேர்தல் ஆணையம் போன்றவை கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காக ஆர். எஸ். பாரதி போன்றவர்கள் ’திருடன் திருடன்’ என ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

கோவையில் 85 வயதுக்கு மேல் இருப்பவர்கள் ஓட்டுப்போட்டால் தங்கத்தில் தோடு, இரண்டாயிரம் ரூபாய் பணம் தருகிறார்கள். இன்னும் சில நாள்களில் இலவசமாக வரக் கூடிய பொருட்களை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். அதனால், பணத்தைப் பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு தார்மீக உரிமை கிடையாது.

கோவையில் எங்களுடைய தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு விளையாட்டு மைதானம் உருவாக்கப்படும் என சொல்லியிருக்கிறோம். கோவை மாநகரத்திலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். இதற்கு மக்கள் ஆதரவு இருப்பதைப் பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று கூறுகிறார், அதுவும் தேர்தல் சமயத்தில்.

ரூ. 400 கோடியில் மைதானம் உருவாக்குவதற்குப் பதிலாக குண்டு குழியுமான சாலையை சரி செய்யலாம். அல்லது தூய்மை இந்தியா திட்டத்துக்கு பணம் வழங்கலாம். கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தால் மக்கள் வாக்களிப்பார்கள் என்பதற்காக முதலமைச்சர் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com