பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை
பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை

கூட்டணி முறிவு- வாய்திறக்க மறுத்த அண்ணாமலை!

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அ.தி.மு.க. அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க தமிழக பா.ஜ.க. அண்ணாமலை மறுத்துவிட்டார்.

கடந்த இரு வாரங்களாக இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் போக்கு நீடித்துவந்ததில், அண்ணாமலையின் அதிரடிப் பேச்சுகளும் முக்கிய காரணம். அப்போதெல்லாம் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க. பற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் சூடாகப் பேசிவந்தார், அண்ணாமலை. ஆனால், இன்று பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என அறிவிக்கப்பட்டதைப் பற்றி கோவையில் யாத்திரையில் இருந்த அவரிடம் கேட்கப்பட்டது.

அப்போது, “ கூட்டணி முறிவு பற்றிய அறிக்கையைப் படித்தேன். பா.ஜ.க. தேசியக் கட்சி என்பதால், கூட்டணி குறித்து கட்சியின் தேசியத் தலைமைதான் முடிவுசெய்யும்.” என்று அண்ணாமலை பதில் கூறினார்.

உடனிருந்த அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனும் இதே கருத்தைக் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com