பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை
பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை

அண்ணாமலையும் கேட்கிறார், அந்த 50 ஆயிரம் வேலைகள் எங்கே?

கடந்த மூன்று ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது; இதில் தமிழக அரசுப் பணி தேர்வாணையம் மூலமாக வழங்கப்பட்ட பணியிடங்கள் வெறும் 10,500 மட்டுமே; மீதமுள்ள சுமார் 50,000 பணியிடங்கள் எவ்வாறு நிரப்பப்பட்டன என்பதைத் தமிழக அரசு தெளிவுபடுத்தவேண்டும் என்று பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

நிதிநிலை அறிக்கை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆறு பக்க அறிக்கையிலிருந்து...:

கடந்த 1919 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் கிராமப்புறங்களில் வெறும் 17% பகுதிகளில் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டிருந்தது. அனைத்து வீடுகளுக்கும் குழாயில் குடிநீர் வழங்கும் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகே, 46 லட்சம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஐம்பது ஆண்டுகளில், ஐந்து முறை ஆட்சியில் இருந்தபோது. இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்த திமுக, தற்போது ஓடி வந்து திராவிட மாடல் அரசு என்று கூறிக் கொள்ள வெட்கமாக இல்லையா?

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு, கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அதற்கான நிதி, மத்திய அரசிடம் இருந்துதான் நேரடியாக பயனாளிகளுக்கு வரும் திட்டத்தின் பெயரை மாற்றிவிட்டால் மக்கள் நம்பி விடுவார்களா என்ன? தன் குடும்பத்தாருக்காக மட்டுமே வாழ்ந்த கலைஞர் எப்போது பொதுமக்களைப் பற்றி நினைத்தார் என்பதுதான் மக்களின் கேள்வியாக இருக்கிறது.

பிரதமரின் கிராமச் சாலை திட்டம் முதல்வரின் கிராமச் சாலை திட்டமாக உருமாறியிருக்கிறது அவற்றை ஒழுங்காகச் செயல்படுத்தியுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை.

மலைக் கிராமங்களில் அவசர மருத்துவச் சிகிச்சைக்குச் சாலை வசதி இல்லாமல் டோலியில் கட்டி தூக்கிச் செல்லும் அவல நிலைதான் இன்னும் தமிழகத்தில் இருக்கிறது இது தான் திராவிட மாடலின் உண்மை முகம்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, மத்திய அரசின் வழிகாட்டுதலின் பெயரிலேயே, வங்கிகள் கடன் உதவி வழங்குகின்றன. இதில் திமுக அரசின் பங்களிப்பு என்ன என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் வங்கியில் நகையை அடமானம் வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நகைக் கடனைத் தள்ளுபடி செய்கிறோம் என்று பொய் சொல்லி ஏமாற்றியதை அத்தனை எளிதாக மக்கள் மறக்கத் தயாராக இல்லை.

சகி நிவாஸ் என்ற பெயரில், மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் விடுதிகளுக்கு தோழி விடுதி என்று பெயர் மாற்றி விளம்பரம் செய்துகொண்டிருக்கிறது திமுக தமிழகத்தில் 20 சகி நிவாஸ் மகளிர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன அது தெரியாமல், 10 விடுதிகள் என்று தமிழக நிதிநிலை அறிக்கையில் தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்

நகரங்களின் பசுமை பகுதிகளை அதிகரிக்க மத்திய அரசு செயல்படுத்தி வரும் நகரங்களில் வனங்கள் என்ற திட்டம், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கிறது தமிழகத்தில் ஏற்கனவே 10 பசுமை வழிகள் இந்தத் திட்டத்தின் மூலம் நகரங்களின் பசுமை பகுதிகளை அதிகரிக்க, மத்திய அரசு செயல்படுத்தி வரும் 'நகரங்களில் வனங்கள்' என்ற திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கிறது தமிழகத்தில் ஏற்கனவே 10 பசுமை வழிகள், இந்தத் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன இதனை அப்படியே மறைத்து, புதிய திட்டத்தைப் போல அறிவித்து யாரை ஏமாற்ற முயற்சிக்கிறது திமுக அரசு?

நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், மத்திய அரசின் ரூ 1,200 கோடி நிதியுதவியுடன், கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இந்தத் திட்டம் நிறைவுபெற்று பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது ஆனால் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் போல. பால. ரூ 1.517 का ஒதுக்கி இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருப்பது மக்களை முட்டாள் ஆக்கும் செயல்

தமிழகத்தில் மாதிரி பள்ளிகளை அமைக்க 452 கோடி செல்விட்டுள்ளதாக, தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் சமகர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழக பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளில் அதை விட பத்து மடங்குக்கும் அதிகமாக ரூ 5.856 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்பதைக் குறிப்பிட மறந்துவிட்டார்கள்

பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த. 5 ஆண்டுகளில் ரூ.7,500 கோடி செலவிடப்படும் என்று அறிவித்து, சென்ற ஆண்டு வரை ரூ 3,500 கோடி நிதி இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது ஆனால் இந்த ஆண்டு அறிக்கையில் தற்போதுதான் ரூ.2497 கோடி மதிப்பில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறி மேலும் ரூ 1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள் கடந்த ஆண்டு வரை எந்தப் பணிகளுமே நடைபெறவில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது

மத்திய அரசின் விஸ்வகர்மா நலத்திட்டத்திற்கு தமிழக கைவினைஞர் மேம்பாட்டு திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு நிதி வழங்குவது மத்திய அரசு தான்

இப்படி, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் அத்தனை நலத்திட்டங்களுமே மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் பல ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்தான் அவற்றின் பெயர்களை மாற்றி திராவிட ஸ்டிக்கர் ஒட்ட நினைத்து மூக்கறுபட்டு நிற்கிறது திமுக

திமுக தங்கள் சொந்த சிந்தனையில் எந்தத் திட்டங்களுமே அறிவிக்கவில்லையா என்று கேட்டால், ஆம், அறிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும், ஒரு வார்த்தை கூட மாறாமல் அறிவிக்கிறார்கள் செயல்படுத்தியதில்லை. ஆனால் எதையும் இதுவரை

அடையாறு ஆற்றை சீரமைக்க, இந்த ஆண்டு ரூ. 1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அடையாறு ஆற்றை சீரமைக்க, கடந்த ஆண்டும் ரூ 1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது அந்த நிதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.

ஒவ்வொரு ஆண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோவில்கள் திருப்பணிகளுக்கு ரூ 100 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு மட்டும் வெளியிடுவார்கள் இதுவரை அந்த நிதி முழுமையாக செலவிடப்பட்டதில்லை மாறாக கோவில் நிதியையே எடுத்து செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு ஆண்டும் மாறாத மற்றொரு அறிவிப்பு புதிய பேருந்துகள் கொள்முதல் மின் பேருந்துகள் கொள்முதல் என்ற அறிவிப்பு இருக்கும் பேருந்துகளையே இயக்க ஓட்டுநர்கள் பணியிடங்களை நிரப்பாமல் ஒவ்வொரு ஆண்டும் வெறும் அறிவிப்பு மட்டும் வெளியிடுவதனால் என்ன பலன்?

மீனவர்கள் நலன் காக்க 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் என கடந்த ஆண்டு அறிவித்த திமுக அதில் எவ்வளவு நிதி இதுவரை மீனவர்கள் நலன் காக்க 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் என, கடந்த ஆண்டு அறிவித்த திமுக, அதில் எவ்வளவு நிதி இதுவரை செலவிட்டுள்ளது என்பது பற்றித் தெரிவிக்கவில்லை அந்த திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய எந்த விவரமும் கூறப்படவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் தமிழக அரசுப் பணி தேர்வாணையம் மூலமாக வழங்கப்பட்ட பணியிடங்கள் வெறும் 10,500 மட்டுமே மீதமுள்ள சுமார் 50,000 பணியிடங்கள் எவ்வாறு நிரப்பப்பட்டன என்பதைத் தமிழக அரசு தெளிவுபடுத்தவேண்டும்.

எல்லாவற்றிற்கும் உச்சமாக தமிழகத்தின் சொந்த வரி வருவாய் 19 விழுக்காடு வளர்ச்சி அடையும் என்று கூறிவந்த நிலையில் வெறும் 12 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளது திமுக அரசின் நிதி மேலாண்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.” என்று அண்ணாமலையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com