அண்ணாமலை
அண்ணாமலை

உயிரே போனாலும் நீட்டை ரத்துசெய்ய முடியாது- அண்ணாமலை அதிரடி!

மக்களவைத்தேர்தல் பிரச்சாரத்தில் கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை இன்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, வாக்காளர் ஒருவர், நீட் காரணமாக பலரும்தற்கொலை செய்துகொண்டார்களே.. அதை நீக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். 

பிரச்சார வாகனத்திலிருந்தபடியே அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “ எங்கள் உயிரே போனாலும் நீட்டை எடுக்கமாட்டோம். உயிரே போனாலும் நீட்டை எடுக்கமாட்டோம்.” எனக் கூற, உடனிருந்தவர்கள் ஓ எனக் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். 

தொடர்ந்து பேசிய அவர், உயிரே போனாலும் நீட்டை மட்டும் எடுக்கமாட்டோம்; நீட் என்பது எங்கள் கொள்கை முழக்கம்; எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை எடுக்கமாட்டோம்; அப்படி எடுத்தாக வேண்டும் என்றால் அப்படிப்பட்ட அரசியலில் இருக்கமாட்டோம் என்றும் அண்ணாமலை கூறினார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com