அண்ணாமலை
அண்ணாமலை

அண்ணாமலை அடுத்த மாதம் கள் பருகுவார்- விவசாயி சங்கம் அறிவிப்பு!

பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பிப்ரவரி மாதத்தில் கள் இறக்கும் போராட்டம் நடைபெறும் என்றும் அதில் அவர் கள் பருகுவார் என்றும் தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது. 

அவ்வியக்கத்தின் தலைவரும் விவசாயி சங்கத் தலைவருமான நல்லசாமி இதைத் தெரிவித்துள்ளார். 

”கள்ளுக்கு கடையும், தடையும் கூடாது. கள் ஒரு உணவு. இது போதைப்பொருளும் அல்ல. மதுவும் அல்ல. கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை, மேலும் இது உலகளாவிய நடைமுறையும் ஆகும். 1950 ஜனவரி 26ஆம் தேதி இந்தய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருந்த கள் இறக்கி பருகும் உரிமையை அநியாயமாக தமிழ்நாடு அரசு பறித்துக் கொண்டது. தமிழ்நாட்டில் மட்டும் 35 ஆண்டுகளுக்கும் மேலாக கள் தடை தொடர்ந்து நீடித்து வருகின்றது. கள் பற்றிய புரிதல் அரசிற்கும், அரசியல் கட்சிகளுக்கும், மதுவிலக்குத் துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சருக்கும் இல்லை. தமிழ்நாட்டில் தற்போது கள்ளுக்கு ஆதரவான போக்கு மக்களிடையே நிலவுகின்றது.

கள் ஒரு உணவு என்பதால் ஏலம், கடை என்று இருக்கக் கூடாது. ஏலம், கடை இருந்தால் கலப்படம் போன்ற தவறுகளுக்கு இது வாய்ப்பாக அமையும். ஒரு சில நேரங்களில் கலப்படம் காரணமாக மரணங்களும் நிகழக்கூடும். கள் ஒரு மருந்து என்பதால் அரசியல் அமைப்புச் சட்டம் 47ஆவது பிரிவின்படி கள்ளுக்கு விலக்களிக்க வேண்டும்.

ஒரு மரத்துக் கள் மருத்துவ குணம் கொண்டது. ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து பருகி வந்தால் சில நோய்கள் குணமாகும் என சித்த மருத்துவம் கூறுகின்றது. குடிநோய்க்கும் கூட கள் ஒரு அருமருந்து ஆகும். ஏலம், கடை என்றிருந்தால் ஒரு மரத்துக் கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அரசியல் அமைப்புச் சட்டம் 47ஆவது பிரிவில் Semún gágú Except for medical purposes of intoxicating drinks and of drugs which are injuries to health என்பது பொருளற்றது ஆகிவிடும். கள் இறக்க அனுமதி கேட்பதுவும், கள்ளுக்கடைகளைத் திறக்கக் கோருவதுவும் அரசியலமைப்புச் சட்டம் 47ஆவது பிரிவிற்கு எதிரானது. இவற்றை முன்னிறுத்தி பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். அந்நிகழ்வில் அண்ணாமலை கள்ளை வாங்கிப் பருகுவார். இந்த நிகழ்வு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்.” என்று நல்லசாமி தெரிவித்துள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com