தமிழ் நாடு
அண்ணாமலை உடல்நிலை - யாத்திரை ஒத்திவைப்பு!!
பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை மாநிலத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருடைய பெயர் சமூக ஊடகங்களில் அடிபட்டபடியே இருக்கிறது. இரு நாள்களுக்கு முன்னர் தில்லிக்குச் சென்ற அவர், நேற்று இரவு சென்னைக்குத் திரும்பினார். அவர் இல்லாமல் நேற்றைய பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஆனாலும் நாளை 5ஆம் தேதி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் தன் யாத்திரையைத் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை தனியார் மருத்துவமனை வெளியிட்ட குறிப்பின்படி, அண்ணாமலை சளி, காய்ச்சலால் அவதிப்படுவதாகவும் அவருக்கு மருத்துவ ஓய்வு தேவைப்படுவதாகவும் அதையொட்டி அவரின் பயணம் தள்ளிவைக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.