அண்ணன் சீர் திட்டத்தில் விஜய் அரசு தந்த அதிர்ச்சி- புதிய அரசாணையில் என்ன?

Annan seer thittam
அண்ணன் சீர் திட்டம்
Published on: 

தமிழகத்தில் திருமணமாகும் பெண்களுக்கான 'அண்ணன் சீர்' திட்டத்தின் அரசாணை சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

அதில், "தமிழகத்தில் ரூ.2.5 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமணத்தின்போது, 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுச் சேலையும் வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த நிர்வாக அனுமதியும், இதற்கான தொகையாக நடப்பு நிதிஆண்டில் முதற்கட்டமாக ரூ. 812 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது.” என்றும்,

”இந்தத் திட்டம், தமிழகத்தில் நடைபெறும் திருமணங்களுக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுடைய மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்திற்கான தகுதி, வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வெளியிடப்படும். அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைபெறும் திருமணங்களுக்கு இத்திட்டம் பொருந்தும். மேலும், இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படும்." என்றும் சமூகநலன் - மகளிர் உரிமைத்துறைச் செயலாளர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, த.வெ.க. கடந்த சட்டமன்றத் தேர்தலில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் மணப்பெண்களுக்கு இத்திட்டம் பொருந்தும் எனக் கூறியிருந்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் ரூ. 2.5 லட்சமாக குடும்ப ஆண்டு வருமானம் எனக் குறைக்கப்பட்டிருப்பதால் எதிர்பார்த்திருந்த பயனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com