தமிழ் நாடு
ஒரே நாளில் மேலும் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
தமிழகத்தில் இன்று காலையில் தலைநகர உளவுத்துறை அதிகாரி உட்பட 24 இந்தியக் காவல் பணி அதிகாரிகள் பதவி, இட மாற்றம் செய்யப்பட்டனர்.
அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு அரை நாள்கூட ஆகாத நிலையில், மேலும் 32 காவல்துறை அதிகாரிகளை மாற்றி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பதவி, ஊர்வாரியான விரிவான விவரம் கீழே: