அமைச்சர் குற்றச்சாட்டுக்கு அப்பாவு சவால்: முதல்வர் விஜய் என்ன சொல்வார்?

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
Published on: 

தி.மு.க.வின் பினாமி கம்பெனிகள் மின்சாரம் வழங்க கடந்த ஆட்சியில் முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் அப்பாவுவின் மகனும் ஒரு மின்சார நிறுவனம் நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

அதற்கு அப்பாவு மறுப்பு தெரிவித்துள்ளார். 

அப்படி மின்சார நிறுவனத்தை நடத்துவதாக நிரூபித்தால், தான் அரசியலை விட்டே விலகுவதாகவும் அப்படி இல்லாவிட்டால் அமைச்சர் பதவியிலிருந்து நிர்மல்குமார் விலகுவாரா என்றும் அப்பாவு கேட்டுள்ளார். 

முதலமைச்சர் விஜய் இதைக் கேட்டுச் சொல்லவேண்டும் என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com