திருப்பரங்குன்றம் தீப வழக்கில் மேல்முறையீடு - அமைச்சர் ரகுபதி!

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி
Published on

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது இருநீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது இது தொடர்பாக கூறியதாவது:

“திருப்பரங்குன்றம் வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும். ஒருவரின் கோரிக்கைக்காக இல்லாத வழக்கத்தை நடைமுறைப்படுத்த முடியாது. தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு சட்டத்திற்கு முரண்பாடான செயலாகும். தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றால் அதற்கான ஆதாரங்களை கண்டறிந்து நீதிபதிகள் தீர்ப்பளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. வழக்கத்தில் இல்லாத ஒன்றை ஏன் நீதிமன்றம் புகுத்த வேண்டும் என்பதுதான் மக்களின் கேள்வி. 144 தடை உத்தரவு விதிக்கப்படவில்லை என்றால், அன்றே தீபம் ஏற்றும் சூழல் ஏற்பட்டிருக்கும். உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பை பெறுவோம்” என்றார்.

சுடுகாட்டில் தான் பிணத்தை எரிக்க முடியும். வேறு இடத்திலா எரிக்க முடியுமா? ஏற்கனவே இருக்கும் பழக்க வழக்கத்தை மாற்றாதீர்கள். எதற்காக இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை கொடுத்து தமிழ்நாட்டில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். மலை உச்சியில் இருப்பது தீப்பத்தூண் அல்ல.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com