தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டு எம்.எட். படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு ஆகஸ்ட் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 25ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் பி.எட். படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பி.எட். படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு சேர்க்கை நடத்தப்படும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள், TNGASA இணையதளம் வழியாகவோ அல்லது அருகில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
பொதுப் பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ரூ.50 விண்ணப்பக் கட்டணமாகவும், ரூ. 2 பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
பட்டியலினத்தவர், பழங்குடியினர் ரூ. 2 மட்டும் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில், ஒரு கல்லூரிக்கு 50 இடங்கள் வீதம் மொத்தம் 300 இடங்கள் உள்ளன.