கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

கால்நடை மருத்துவப் படிப்பு சேர்க்கை : ஜூன் 3 முதல் விண்ணப்பம்!

கால்நடை மருத்துவ அறிவியல் இளநிலை பட்டப்படிப்புச் சேர்க்கைக்கு வரும் ஜூன் 3ஆம் நாள்முதல் முதல் விண்ணப்பம் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் பட்டப்படிப்புச் சேர்க்கைக் குழு தலைவர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பி.வி.எஸ்.சி. ஏ.எச்., பி.டெக். ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்களை, பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் https://adm.tanuvas.ac.in மூலம் ஜூன் 3ஆம் தேதி முதல் 20ஆம் தேதி மாலை 5மணிவரை அனுப்பலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அயல்நாடு வாழ் இந்தியர்/ அயல்நாடுவாழ் இந்தியர் குழந்தைகள்/ அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி உதவி பெற்றோர், அயல்நாட்டினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு குறித்து அதே இணையதளத்தில் https://adm.tanuvas.ac.in தெரிந்துகொள்ளலாம் என்றும் சேர்க்கைக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com