தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

நலத்திட்ட உதவிகள்... கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்!

Published on

11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி திருப்பத்தூர், திண்டுக்கல், சென்னை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை, புதுக்கோட்டை, நாமக்கல், நாகப்பட்டினம் போன்ற 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இயற்கைப் பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com